Header Ads



10 வயது சிறுமி துஷ்பிரயோகம், 46 வயது ஆசிரியர் கைது

பாடசாலை மாணவியான பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த  ​எஹலியகொட பொலிஸார், அந்த ஆசிரியருக்கு 46 வயதாகும் என்றனர்.


சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக கூறப்படும் அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், ​வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.