1, 50,000 பேரின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் - வைத்திய நிபுணர் கிரிஷான்
இலங்கையர்கள் 1, 50,000 பேரின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் கிரிஷான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் வலிப்பு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை வலிப்பு நோயாளர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது கால் , கை வலிப்பு நோயாளர்களின் எண்ணிக்கை 1, 50,000 இற்கும் அதிகமாக உள்ளதாகவும், இவர்களின் நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment