இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த தகவல், STF இன் தேடுதலில் வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா பிடிபட்டது
அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை(3) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை தமன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment