அமைச்சு பதவியை எடுக்குமாறே ரணில், 2 முறை அழைத்தார், SMS அனுப்பியதாக பச்சை பொய் கூறுகிறார்
- AA. Mohamed Anzir -
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமென தனக்கு ஒருபோதும் குறுச்செய்தி (SMS) அனுப்பவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் சற்றுமுன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
இதகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியான செய்தியை நான் வாசித்தேன். அதுதொடர்பில் எனது விளக்கத்தை கூறுகிறேன்.
அதாவது ரணில் ஜனாதிபதியானவுடன் ஒருமுறை பாராளுமன்றத்தில் வைத்து என்னுடன் கதைத்தார். அதற்கு முன்னதாக அநுரகுமாரவுடன் உரையாடிக் கொண்டிருந்ததை அவதானித்தேன். எனக்கு அமைச்சுப் பதவியை பாரமெடுக்குமாறு 2 முறை வேறுவேறு ஆட்களை அனுப்பி அழைப்பு விடுத்தார்.
எனக்கு என்ன வேண்டுமென்றும், அவரது தூதுவர்கள் என்னிடம் கேட்டார்கள்
இருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமென்று, அல்லது அவரது தூதுவர்கள் மூலமோ அவ்வாறான குறுச்செய்தி SMS ஒன்றை ஜனாதிபதி ரணில், எனக்கு அனுப்பவில்லை. அவர் அப்படி ஒரு SMS எனக்கு அனுப்பியதாக கூறுவது பச்சைப் பொய்.
அவரது இன்றைய 23-02-2023 பாராளுமன்ற உரை ஒரு ஜோக்காக இருந்தது எனவும், முஜீபுர் ரஹ்மான் மேலும் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
Post a Comment