Header Ads



SJB யின் தீர்மானத்தை மீறினார் பௌசி - ரணிலுக்கு ஆதரவளிக்கப் போகிறாரா..?


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை அறிக்கை மீதான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ள போதிலும் அக்கட்சியின் புதிய எம்.பியான ஏ.எச்.எம். பௌசி விவாதத்தில் கலந்து கொண்டார்.


பாராளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார்.


அவர், தனதுரையில், “ தேசத்திற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவதாக தெரிவித்த அவர், அரசியலைப் பற்றி சிந்திப்பதை விட தேசத்திற்கான பொறுப்பை உண்மையாக நிறைவேற்றுவேன்,” என்று அவர் கூறினார்.


"தேசத்திற்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், எனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறுகிறேன். எந்தவொரு வாக்குச் சாவடி முகவர்களையும் நியமிக்காமலும் மற்றவர்களைப் போன்று வாக்கு எண்ணும் நிலையங்களுக்குச் செல்லாமலும் நான் சுமார் 30,000 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.


அவர் தனது கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார் மற்றும் அவர் கொழும்பு மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தெரிவித்தார்.


"மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன என்னை பாதுகாத்தார், ஆனால் அந்த நேரத்தில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வேறு சில ஐ.தே.கட்சியினரின் அழுத்தத்திற்கு அடிபணிய வேண்டியிருந்தது" என்று அவர் நினைவு கூர்ந்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டிடுவதற்காக தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்தார். அவரது வெற்றிடத்துக்கே ஏ.எச்.எம். பௌசி, நேற்று (09) எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

No comments

Powered by Blogger.