Header Ads



குருணாகல் மாநகர சபையை பிடித்தது SJB


குருணாகல் மாநகர சபையின் புதிய மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் சுமேத அருண ஷாந்த மேலதிக வாக்குகளால் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


மேயர் பதவிக்காக சுமேத அருண ஷாந்த மற்றும் விஜயாநந்த வெடிசிங்க ஆகியோர் போட்டியிட்டனர்.


இதன்போது சுமேத அருண ஷாந்தவிற்கு 10 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், விஜயாநந்த வெடிசிங்க 06 வாக்குகளை பெற்றுள்ளார்.


கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியன சரிசமனான ஆசனங்களை வென்றமையால், திருவூலச்சீட்டினூடாக நகர மேயராக துஷார சஞ்ஜீவ தெரிவு செய்யப்பட்டார்.


இந்த ஆண்டுக்கான மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிப்பட்டமையால், அவரை பதவி நீக்குவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்திருந்தார்.


அதற்கமைய, புதிய மேயருக்கான வாக்களிப்பு இன்று நடத்தப்பட்டது. TL

No comments

Powered by Blogger.