Header Ads



SJB 3 ஆக பிளவு, பிரேமதாஸவுக்கு சவால் விடுக்கும் ரங்க


 ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தியவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்று கணித்திருந்ததாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் அரசியல் கூட்டணியை அமைக்கும் என்ற அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் கருத்தை உறுதிப்படுத்தினார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.


ஐக்கிய மக்கள் சக்தி பல அணிகளாக பிளவுபட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறிய அவர், ராஜித குழு, பொன்சேகா குழு மற்றும் சமீபத்தில் மயந்த குழு என பிளவுபட்டுள்ளதாகவும் முடிந்தால் இந்த குழுக்களை  ஒன்றிணைத்து காட்டுமாறு சஜித் பிரேமதாஸவுக்கு சவால் விடுவதாகவும் குறிப்பிட்டார்.


எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த எம்.பிக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் கூட்டணியில் இணையவுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அண்மையில் பதுளையில் தெரிவித்த கருத்தையும் ரங்கே எம்.பி உறுதிப்படுத்தினார். 

 

அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு, அக்கட்சியின் எம்.பியான மயந்த திஸாநாயக்கவுக்கு மற்றுமொரு சிரேஷ்ட எம்.பி ஊடாககட்சித் தலைமை அழுத்தம் கொடுத்துள்ளதாக ரங்கே பண்டார சுட்டிக்காட்டினார்.


குறித்த குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை மீண்டும் அப்பதவிக்கு நியமிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலில் தடுக்க விரும்பினார் என்றும்  ஹர்ஷ சில்வாவை மகிழ்விப்பதற்காகவே அவர் திஸாநாயக்கவை பதவி விலகுமாறு கூறியிருந்தார் என்றும் ரங்கே எம்.பி சுட்டிக்காட்டினார்.


சில்வா மற்றும் திஸாநாயக்க ஆகிய இருவரையும் பிரேமதாசவால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிகிறது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

1 comment:

  1. சஜித்தின் போக்கு நாட்டின் ஒரு முக்கியமான தேசிய கட்சிக்கு ஒரு நாளும் பொருத்தமான அமையவில்லை என நாம் பலவருடங்களாக கூறிவருகின்றோம். சரியான தீர்மானம் எடுக்கும் மனவலிமையற்ற ஒருவர் என்பதை கோதா சனாதிபதி பதவியைக் கொடுக்க முயற்சி செய்தபோது தேவைற்ற நிபந்தனைகளைப்போட்டு பின்வாங்கியவர். அதே கொள்கைதான் சரத் பொன்சேகாவிடமும் உள்ளது. படையில் தளபதியாக வர பதவியின் உயர்வும் அதைவிட முக்கியமாக அரசியல் செல்வாக்கும் இருக்க வேண்டும். அந்த இரண்டும் கிடைத்ததனால் படைத்தளபதியாக பொன்சேகா நாட்டுத் தலைவராக வருவற்குரிய தகைமை அவரிடம் இல்லை. சனாதிபதியின் மகன் என்பதற்காக சஜித்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததனால் மாத்திரம் நாட்டுத்தலைவராக முடியாது. என்ன கதையை அவர் அளந்தாலும் ஹோட்டல் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டாலும் வீட்டிலிருந்து உணவுப் பார்சலைக் கட்டிக் கொண்டு செல்லும் சஜித் சந்தேகப் பேர்வழி. அந்த சந்தேகம் ஒரு நாட்டுத் தலைவருக்கு இருக்கவே கூடாது. ஆனால் stretagic suspicion இருப்பதில் பிழையில்லை. அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது ஒரு தலைவருக்குத் தெரியும்.ஒரு தலைவருக்குரிய சிறந்த பண்மை துருக்கித் தலைவர் அர்பிகான் அவர்களிடம் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற இராணுவம் முயற்சி செய்தபோது அதை எவ்வாறு வெற்றிகரமாக முறியடித்தார் என்பதை அவருடைய அனுபத்தின் மூலம் சிறப்பாக நடைமுறைப்படுத்திக் காட்டினார். சனநாயக அடிப்படையில் சனாதிபதியாக எகிப்தில் தெரிவு செய்யப்பட்ட மர்ஹூம்கலாநிதி முஹம்மத் முர்ஸி அவர்கள் மிகச் சிறந்த திறமையான ஒரு ஆட்சியாளர். ஆனால் அவரிடம் stretagic suspicion இருக்கவில்லை. அந்த பாரிய குறைபாட்டால் இராணுவம் செய்த சூழ்ச்சியை அவரால் கண்டு கொள்ள முடியவில்லை. இறுதியில் அந்த சூழ்ச்சி அந்த உயரிய மனிதனைப்பலி வாங்கிவிட்டது. அதன் விளைவாக எகிப்து இன்று இராணுவத்தின் பிடியில் சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.