Header Ads



அலி சப்ரி - (SFD) சந்திப்பு - குறிஞ்சாக்கேணிப் பாலத்திற்கு நிதி வருகிறது


இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (27. 02. 2023) காலை 10 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அலி சப்ரிia வெளிவிவகார அமைச்சில் சந்தித்து எமது நாட்டின் நிலமை குறித்தும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்கள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. 


இதன்போது இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் உட்பட வெளிவிவகார அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட குறிஞ்சாக்கேணிப் பாலத்தினை நிர்மாணிப்பதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மாயாதுன்னவிடம் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் விடுத்த வேண்டுகோளையடுத்து  விடுத்த வேண்டுகோளையடுத்து நெடுஞ்சாலைகள் அமைச்சில் இன்று (27. 02. 2023) பகல் 12 மணியளவில் இடம்பெற்ற சவூதி அபிவிருத்தி நிதியத்தின் (SFD) கலந்துரையாடலில் அதற்கான நிதி உதவியினை வழங்குவதற்கு சவூதி அபிவிருத்தி நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.