Header Ads



துருக்கி அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார் இம்தியாஸ் Mp


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இன்று (09) கொழும்பில் உள்ள இலங்கைக்கான துருக்கி இராச்சியத்தின் தூதுவர் திருமதி.ரகிபே டெமெட் செகேர்சியொக்லு அவர்களைச் சந்தித்து நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்தருக்கும் துருக்கி அரசாங்கத்திற்கும் துருக்கி மக்களுக்கும் தனது ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்ததோடு,அநுதாப பதிவேட்டிலும் தமது குறிப்பை பதிவிட்டார்.


துருக்கி அனுபவித்து வரும் பெரும் இழப்பு மற்றும் துன்பங்களுக்கு துருக்கி அரசுக்கும் துருக்கி மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு,துருக்கி மக்கள் இழந்த தமது அன்புக்குரியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது பிரார்த்தனைகளையும் பதிவிட்டார்.


கருணையுள்ள துருக்கி மக்கள் தாங்கள் தனியாக இல்லை என்பதையும்,உலக நாடுகளுடன் இணைந்து இலங்கை வாழ் மக்களும் துருக்கியரின் துயரத்திலும் தேவையிலும் அவர்களுடன் முன்நிற்கிறோம் என்பதையும் அறிந்து ஆறுதல் பெற முடியும் என தான் நம்புவதாகவும்,பிரிந்து சென்ற ஆன்மாக்களுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும் எனவும்,அவர்கள் விட்டுச் சென்றவர்களுக்கு சாந்தியை வழங்குவானாக எனவும் தமது குறிப்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.


கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாகவும், பேரழிவாகவும் இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.



No comments

Powered by Blogger.