பொதுஜன பெரமுன Mp சந்திம வீரக்கொடி சஜித்துடன் இணைவு, உயிருள்ளவரை கூட இருப்பதாகவும் தெரிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடையில் இணைந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் காலி ஹினிதும பகுதியில் நடைபெற்ற பேரணியிலேயே அவர் இவ்வாறு கலந்துகொண்டுள்ளார்.
இந்த நாட்டில் பட்டினியை ஒழிக்கும் செயற்பாட்டிற்கு சஜித் பிரேமதாச உழைக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அவருடன் தனது உயிருள்ள வரை இணைந்து செயற்படவுள்ளதாகவும் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மகிந்த ராஜபக்ச காரணம் அல்ல, அதனால் அவர் அதற்கு பொறுப்புக்கூறத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment