தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையின் ‘Love with Animals Week’
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிச்சாலையின் ‘Love with Animals Week’ இன்று (11) ஆரம்பமாகிறது.
விலங்குகளுக்கு அன்பையும் கருணையையும் வழங்கும் நோக்கில் இந்த வாரம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய விலங்கியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பார்வையாளர்கள் இந்த வாரத்தில் விலங்குகளுக்கு உணவளிக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
விலங்குகளுடன் புகைப்படம் எடுக்க பிரத்தியேக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வாரத்தில், தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கு வருடத்துக்கு பல தடவைகள் வருகை தரும் பார்வையாளர்களுக்கு விஷேட அங்கத்துவ அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Post a Comment