Header Ads



JVP நாட்டுக்காக எதனையும் செய்யவில்லை, அதன் வேட்பாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள்


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியால் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகளுக்கு முன்மொழிப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.


இந்த ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பஸ்பாகே கோரளை மற்றும் நாவலப்பிட்டி நகர சபை இணைந்து கொத்தணிக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன.


மேலும் கருத்து தெரிவித்த மகிந்தானந்த அளுத்கமகே, இந்த நாட்டின் வாக்காளர்கள் பல வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் 43 உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்தனர்.


அந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டுக்காக எதனையும் செய்யவில்லை, அவர்கள் தமது தனிப்பட்ட விடயங்களை மாத்திரமே செய்தார்கள் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.


நாட்டில் 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் சென்று கொவிட் தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது நம்பிக்கை வைக்குமாறு நாவலப்பிட்டி வாக்காளர்களிடம் மஹிந்தானந்த அளுத்கம வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.