ரணிலின் இனவாதச் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் - JVP
எரியும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து வருவதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .
நாடு முழுவதும் உள்ள மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து பேசிக் கொண்டிருந்தனர் . எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் 13 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான இந்த உரையாடலை ஆரம்பித்தார் .
எனவே அவரின் இனவாதச் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்வதாக டில்வின் சில்வா குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்தார் .
தற்போது தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் , தேர்தலை நிறுத்தினால் பண விரயமே ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
Post a Comment