பாராளுமன்றத் தேர்தலில் JVP முன்னிலை, SJB வாக்கு அதிகரிக்கலாம் - மண்கவ்வும் 3 பிரதான கட்சிகள்
கடந்த ஜனவரி மாதம் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜேவிபி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுக்கு இடையில் உச்ச போட்டி நிலவுவது அறியப்பட்டுள்ளது.
முறையே 32 மற்றும் 31வீத வாய்ப்புக்களை இந்த இரண்டு கட்சிகளும் பெறும் என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக்கட்சி 9 வீத வாக்குகளையும், பொதுஜன பெரமுன 8 வீத வாக்குகளையும் பெற்றுக்கொள்ளும்.
அதேநேரம் இலங்கை தமிழரசுக்கட்சி 5 வீதத்தையும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1வீதத்தையும் பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.
ஏனைய கட்சிகள் 14வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்குகள் 3வீதத்தாலும், ஜேவிபியின் வாக்குகள் ஒரு வீதத்தாலும், அதிகரித்துள்ளன.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாக்குகள் 11 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியும், இலங்கை தமிழரசுக்கட்சியும் வடக்குகிழக்கில் முன்னிலைப் பெறும்.
எனினும் மேற்கு, தெற்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஜேவிபி முன்னிலை பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (பட உதவி - டெய்லிமிரர்)
Post a Comment