Header Ads



JVP இன்னமும் கொடியதுதான், இளைஞர்கள் இதை அறியாதுள்ளனர், நாட்டிற்கு 2 ஆவது மிகப்பெரிய அழிவையும் செய்தனர்


பிரபாகரனுக்குப் பின்னர் நாட்டிற்கு மிகப்பெரிய அழிவை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) செய்துள்ளதாக மேல் மாகாண அதிகார சங்கநாயக்க திஹாகொட பத்திய தேரர் தெரிவித்துள்ளார்.


கடந்த காலங்களில் ஜே.வி.பி நாட்டிற்கு செய்த அழிவுகளை மக்கள் மறக்கவில்லை என்றும்,மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் தோன்றினாலும், இன்னமும் அதே கொடிய கட்சி தான் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.


 ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கடந்த காலத்தை அறியாத இளைஞர்கள் மக்கள் விடுதலை முன்னணியை சுற்றித் திரண்டு வருகின்றனர் .


தலதா மாளிகை மீதான தாக்குதல், பிக்குகள் படுகொலை, அரச சொத்துக்கள் அழிக்கப்பட்டமை போன்ற பல அழிவுச் செயல்களுக்கு ஜே.வி.பி பொறுப்பேற்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை.


மேலும், அவர்கள் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளாத ஒரு குழுவிடம் நாட்டின் ஆட்சி சென்றால், ஏற்படும் சூழ்நிலையை எவரும் கற்பனை செய்து பார்க்க முடியும் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.


 

No comments

Powered by Blogger.