முட்டாளை கண்டுபிடித்த உலக பணக்காரர் - டுவிட்டரின் புதிய CEO
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், தலைமை பொறுப்பை வகித்து வந்தார். அந்த நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்திய அவர், தலைமை பொறுப்பை தொடர்ந்து வகிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தன்னை பின்தொடரும் 12.2 கோடி பேரிடம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார்.
வாக்கெடுப்பில் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் அவர் உறுதி கூறியிருந்தார்.
அதன் முடிவில் அவர் பொறுப்பில் இருந்து விலகலாம் என 57.5 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
இதனையடுத்து எலான் மஸ்க், ‘சிஇஓ பதவிக்கு முட்டாள் ஒருவரை கண்டுபிடித்த பிறகு, விரைவில் தலைமை பதவியில் இருந்து விலகுவேன்’ என்றும், ‘மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களை மட்டும் வழிநடத்த போகிறேன்’ எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டுவிட்டரில் தனது வளர்ப்பு நாய்யின் புகைப்படத்தை பகிர்ந்து, டுவிட்டரின் புதிய சிஇஓ என்றும், மற்றவர்களை விட இது சிறந்தது எனவும் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Post a Comment