Header Ads



இனவாத தாக்குதலில் தீக்கிரையாக்கப்பட்ட அரபுக் கல்லூரி, மூன்றரை வருடங்களின் பின் திறக்கப்படுகிறது


(யு.எல். முஸம்மில் )


உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு பின்னர் 2019 ஆம் ஆண்டு மே மாதம் மினு­வங்­கொட மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் இன­வா­தி­களால் திட்­ட­மி­டப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­பட்ட இன­வாத தாக்­கு­தலில் தீக்­கி­ரை­யான கொடம்­பி­டிய ஜமா­லியா அர­புக்­கல்­லூரியை மூன்­றரை வரு­டங்­க­ளுக்கு பின்னர் மீளவும் திறக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.


குறித்த அரபுக் கல்­லூ­ரியை மீள திறக்கும் நிகழ்வு எதிர்­வரும் 13ஆம் திகதி திங்­கட்­கி­ழமை அதிபர் அஷ்ஷெய்க் இர்ஸான் (ஜமாலி) தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது.


திறப்பு விழாவில் அஷ்ஷெய்க் அம்ஹர் ஹகம்தீன், அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் (ஹிழ்ரி) ஆகியோர் விஷேட சொற்பொழிவாற்றவுள்ளனர். – Vidivelli

No comments

Powered by Blogger.