Header Ads



அரசாங்கம் என்னை பதவி நீக்கம் செய்துவிட்டது, சஜித் என்னுடன் இணைவார் என உறுதியாக நம்புகிறேன்


பொது நிதி தொடர்பான குழுவின் புதிய தலைவராக சக கட்சியின் உறுப்பினரான மயந்த திஸாநாயக்க அண்மையில் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.


திருடர்களைப் பாதுகாப்பதற்கும், மக்களிடமிருந்து திருடுவதற்கும்' தமக்கு விருப்பமில்லாததால், அரசாங்கம் தம்மை பதவி நீக்கம் செய்துள்ளது என்று ஹர்ச அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


சட்டவிரோதமாக இந்த மோசடி குழுக்களால் விரட்டப்பட்டமை என்பது தெளிவாகின்றது. இதனால் அவர்கள் தொடர்ந்து மக்களிடமிருந்து திருடுவார்கள்' என்று ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.


நாட்டிற்குச் சேவை செய்த போதிலும் தாம்; இப்போது அரசியல் பலிகடா ஆகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இருப்பினும், தாம் பின்வாங்கப்போவதில்லை என்றும் மோசடி குழுவை தோற்கடிக்க முன்பை விட வலுவாக எழுந்து நிற்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த அநீதிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தம்முடன் இணைவார் தாம் உறுதியாக நம்புவதாகவும் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.