Header Ads



தாயும், மகளும் கொலை


ரத்கம, ஓவகந்த பிரதேசத்தில் நேற்றிரவு தாயும்,மகளும் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி மகள் உயிரிழந்துள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்தில் காயமடைந்த தாய் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


காதல் உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் இந்த கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்தில் ரத்கம, ஓவகந்தவை வசிப்பிடமாக கொண்ட பாதுராகட ஷரமிலா லக்ஷானி (வயது 20) என்ற இரண்டு வயது குழந்தையின் இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் ரத்கம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், உயிரிழந்த பெண்ணின் உறவினர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேகநபரின் 17 வயதுடைய மகன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனின் சகோதரியுடன் காதல் தொடர்பு வைத்திருந்தமையினால் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கான காரணம் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.