பெல்கனியில் நீதவானை சிறைபடுத்தி விட்டு, அவரது கார் திருட்டு - பட்டப்பகலில் சம்பவம்
காரைத் திருடியவர் அதனை பண்டாரகமப் பகுதியை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளதாக பாதுகாப்புக் கெமராக் காட்சிகளூடாகத் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பரிட்சயமான இந்நபர்,சரளமாக வீடு வாடகை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரைத் திருடிச் சென்ற அந்நபர்,அந்தக் காரில் முக்கிய ஆவணங்கள் சில உள்ளதாகவும், அந்த ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டுமானால் தமக்கு ஐந்து இலட்சம் ரூபாவை வழங்குமாறு நீதிபதியிடம் கோரியுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நீதிபதியான சம்பத் ஆரியசேன தற்போது மொரட்டுவையிலுள்ள அவரது இல்லத்தில் வசித்து வருகிறார். அவரது வீடு மொரட்டுவை ராவத்தா வத்தை சன்சிட்டி தொடர்மாடியில் உள்ளது. பிலியந்தலையிலு ள்ள அவரது வீட்டை அவர் வாடகைக்கு விடுவதற்காக வர்த்தக விளம்பரம் ஒன்றை இணையத்தளத்தில் வௌியிட்டிருந்ததாகவும் அந்தப் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த அந்த வீட்டை வாடகைக்குப் பெற்றுக் கொள்ளும் போர்வையில், அங்கு வந்த நபரே இவ்வாறு காரைக் களவாடிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரைத் தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் விஷேட பொலிஸ் குழு ஈடுபட்டுள்ளது.
லோறன்ஸ் செல்வநாயகம்
Post a Comment