பிள்ளைகளை பாலத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்த தாய்
18 மாத மகளையும் ஒன்பது வயது மகனையும் பாலத்தில் விட்டுவிட்டு பெந்தர ஆற்றில் குதித்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (26) பிற்பகல் பெந்தர பாலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 40 அடி உயரத்தில் இருந்து குறித்த பெண் நீரில் குதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பெண் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அருகில் நீர் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் காப்பாற்றினான்.
பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், எல்பிட்டிய, உரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment