மேடையில் ஏறமட்டாரா மஹிந்த..?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பின்வாங்க தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய, அவர் பிரசார மேடைகளில் கலந்து கொள்ளப்போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் உடல் நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமையவே அவர் 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான பலமும் மக்கள் செல்வாக்கு பெற்ற நபராகவும் மகிந்த மட்டுமே உள்ளார்.
இந்நி்லையில் தேர்தல் பிரசாரங்களில் அவர் பங்கேற்காமை பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கட்சிக்காரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. TW
புற்றுநோய் உற்பட ஆயிரம் நோய்களுடன் நடமாடும் பொம்மையான இவர் அரசியல் செய்வது எப்படிப்போனாலும் இந்த நாட்டை காபாஸினாவாக்கி நாட்டு மக்களை சரியாக உண்ணவின்றி தவிர்க்கும் நிலைக்குத் தள்ளி அவர்களின் சொத்துக்களையும் அரசாங்கத்தை நடாத்த திறைசேரியில் இருந்து பில்லியன்கணக்கான டொலர்களையும் களவாடிக் கொண்டு நைஜீரியா, இத்தாலி, துபாய் போன்ற நாடுகளில் அந்த கோடான கோடி டொலர்களையும் புதைத்து வைத்துவிட்டு தற்போது அந்த நாடுகளுக்குச் செல்லமுடியாதபடி அந்த பணத்தை அனுபவிப்பவர்கள் செய்து விட்டார்கள். எனவே களவாடிய பணத்தை அனுபவிக்கவும் முடியாது. அதை குடும்பத்தில் யாருக்கும் பகிரவும் முடியாது. புற்றுநோயுடன் அந்தக் கவலை வேறு. அது மட்டுமல்ல இந்த அநியாயத்தைச் செய்து விட்டு இலட்சக்கணக்கான மக்களை வறுமையில் தள்ளிய அநியாயத்துக்கு நிச்சியமான கடவுள் இந்த உலகிலும் மறுமையிலும் நிச்சியம் சரியான தண்டனைகளை வழங்கியே தீருவான். நிச்சியமாக இந்த நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களோ பிறகு வரும் ஆட்சியாளர்களோ இவனையும் இவனுடைய குடும்பத்தையும் தண்டிக்கும் என எதிர்பார்க்கவே முடியாது. அவை அனைத்தையும் கடவுள் ஒரு அணுவும் குறையாது தண்டிப்பான். அதுமாத்திரம் உறுதியானது. நிச்சியமாக நடைபெறும்.
ReplyDelete