இராஜினாமா செய்தார் வடிவேல்
ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான வடிவேல் சுரேஸ், ஐக்கிய மக்கள் சக்தியில் வகித்த சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பிலான பிரசாரக் கூட்டமொன்றை வடிவேல் சுரேஸ் எம்.பி, மடுல்சீமையில் ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளவிருந்தார்.
எனினும், அந்தக் கூட்டத்துக்கு சமூகமளிக்காத சஜித் பிரேமதாஸ, வெளிமடையில் நடைபெற்ற மற்றுமொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். மடுசீமை கூட்டத்துக்கு வரவே இல்லை. இதனால், அங்கிருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment