இப்படியும் ஒரு முறைப்பாடு
மாத்தளையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவி ஒருவர், பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
வினாத்தாளுக்கு விடை எழுதும்போது, மேலதிகமாக விடைத்தாள் கேட்டபோது, அவர் அதற்கு அளித்த பதிலால் தான் அதிர்ச்சியடைந்ததாக மாணவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தர்க்கவியல் வினாத்தாளுக்கு விடைகளை எழுதும்போது, பரீட்சை நிலைய மேற்பார்வை செயற்பட்ட விதத்தின் காரணமாக தான் பாடத்தை மறந்துவிட்டதாக இந்த மாணவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாத்தளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment