பிரபாகரனை இழிவுபடுத்துகின்ற செயலை, நெடுமாறன் செய்திருக்கக் கூடாது
இவ்வாறு வேதனையுடன் தெரிவித்துள்ளார் அருட்பணி ஜெகத் கஸ்பார் அடிகளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனது மனைவி மற்றும் மகள், மகன் என அனைவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான சகல வசதி வாய்ப்புகள் இருந்தும் அதனை மறுத்து, அவர்களை மக்களோடு மக்களாக நிற்க வைத்த மாபெரும் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.
அதனைவிட அவரது சகோதரர்கள் எவருமே விடுதலைப்புலிகளின் கட்டளை அமைப்பில் எந்தப்பிரிவிலும் வராதவர்கள்.எனவே இப்படி கட்டளை பிரிவில் எதிலும் வராத அவர்களது சகோதரர்களை நம்பி அவர் தப்பிச் சென்றார் அவர்களது பாதுகாப்பில் இருக்கிறார் அவரைப்பற்றி அவர்கள் அதிகாரபூர்வமாக பேசக்கூடிய அளவிற்கு அவர் தன்னை ஆக்கி கொண்டார் என்று சொல்வதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அந்த மாபெரும் தலைவனுக்கு என்னளவில் ராஜேந்திர சோழனுக்கு பிறகு,சேரன் செங்குட்டுவனுக்கு பிறகு, சுந்தரபாண்டியனுக்கு பிறகு,12 ஆம் நூற்றாண்டு பகுதியில் தமிழர்கள் இழந்து விட்ட இறையாண்மையை கடந்த எட்டு நூறு ஆண்டுகளாக இல்லாதிருந்த இறையாண்மை அநாதைகளான தமிழர்களான நாம்.எமக்கென்று இறையாண்மை இல்லை.அவர்களுக்கு இறையாண்மையை பெற்றுக்கொடுக்க போராடியவர் தான் தலைவர் பிரபாகரன்.
ஓரிரு இலட்சம் மக்களை எண்ணிக்கையில் கொண்டிருக்கின்ற இனங்கள் கூட இறையாண்மை கொண்ட தேசங்களை கொண்டிருக்கின்றபோது ஆயிரம் இலட்சம் உயிர்களை கொண்டிருந்தும் இறையாண்மை இல்லாத இனம் தமிழ் இனம். அந்த இனத்திற்கு ஏறக்குறைய இறையாண்மையை கொண்டு வரக்கூடிய அளவிற்கு இழுத்து வந்த மாபெரும் வரலாற்று தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.
அவரை இந்த அளவிற்கு இழிவு படுத்துகின்ற செயலை ஐயா நெடுமாறன் அவர்கள் செய்திருக்க கூடாது. என தெரிவித்துள்ளார்.
Post a Comment