வெடிப்புச் சம்பவம், தம்பதியினர் காயம், சில பகுதிகள் மூடப்பட்டது
இரத்மலானை - கல்தெமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் வயோதிப தம்பதியினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளது.
குறித்த வயோதிப தம்பதியினர் தங்களது வீட்டிற்கு முன்பாக உள்ள காணியை சுத்தம் செய்து தீ வைத்த போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குண்டு வெடித்ததில் சிறிய இரும்புத் துகள்கள் தம்பதியினரின் கை, கால்களில் ஆழமான காயங்களை ஏற்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
காயமடைந்த தம்பதியினர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தற்போது அப்பகுதி மூடப்பட்டு, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment