இந்நாட்டுக்கு எப்படிப்பட்ட அரசாங்கம் தேவை..? அநுரகுமாரவின் விளக்கம்
தேசிய மக்கள் சக்தியின் எற்பாட்டில் யாழ் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடான சந்திப்பு நேற்று (17.02.2023) யாழ். டீம்பர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,.
இந்த நாட்டினை அழிவுக்கு கொண்டு வந்தது இந்த மோசடியாளர்களால் ஆகவே, இந்த நாட்டுக்கு நல்ல அரசாங்கம் தேவை.
மோசடிக்காரர்களுக்கு தண்டனை வழங்குகின்ற அரசாங்கம் தேவை, மோசடி செய்ததை மீண்டும் பெற்றுக் கொள்ளுகின்ற அரசாங்கம் வேண்டும். அதற்காக ஒன்றினைய வேண்டும்.
இந்த நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தச்சட்டத்தினை வழங்குவோம் என்று பொலிஸ், காணி அதிகாரத்தினை வழங்குவோம் என்று கூறுகின்றார்.
இது ஏன்? தென் பகுதி பெரிய பிரச்சினையினை உருவாக்கி அங்கு ஆர்ப்பாட்டங்களை உருவாக்க உண்மையான பிரச்சினை ஆட்சியாளர்களுக்கு எதிராக இருக்கின்றது.
அதனை விடுத்து ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள மக்களை குழப்பி வடமாகாண தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுத்துகின்றார்.
இந்த ஜனாதிபதி நான்கரை வருடங்கள் பிரதமராக இருந்தார். புதிய அரசியலமைப்பு யாப்பினை தயாரிப்பதற்கு ஒரு சபை தாபிக்கப்பட்டது. ஒரு குழுவினை அமைத்தனர்.
இதில் 82 கலந்துறையாடல்கள் இடம்பெற்றன. அதில் எந்ததொரு அறிக்கையும் புதிய அரசியலமைப்பு யாப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பிக்கவில்லை.
வடக்கின் சூதாட்டாமான நிலையில் வைத்து இருக்க வேண்டிய நிலையினை உருவாக்குவதற்குத் தான்.
வடக்கில் தேர்தல் வரும்போது 13 ஆவது திருத்தச் சட்ட பற்றி வடக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன், தென் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் இருவரும் பந்து அடித்து விளையாடுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
இதில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment