அநுரகுமார கடைக்குள் ஓடியது ஏன்..?
கொழும்பு நகர மண்டபப் பகுதியில் தேசிய மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய போது, பாதுகாப்பு கருதி அருகில் உள்ள கடைக்குள் சென்றதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தான் மட்டுமல்ல அப்போது தன்னுடன் இருந்த ஒரு கூட்டமும் அவ்வாறு சென்றதாக தெரிவித்தார்.. வீரம் என்பது முட்டாள்தனம் அல்ல என்றும் அவர் கூறினார்.
காவல்துறையினர் தொடர்ந்து கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை வீசிய போதே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் அதனை தடுக்குமாறு காவல்துறையினரிடம் கூற சென்ற போதே காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு கருதி அந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போராட்டத்தின் மீது காவல்துறையினர் எண்பது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment