ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு காலிமுகத் திடலுக்குள் செல்லக் கூடாது - நீதிமன்றம் உத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸ் நிலையத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அதன் 7 அமைப்பாளர்கள் மற்றும் அதில் பங்குபற்றுபவர்கள் ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலிமுகத் திடல் மற்றும் 2 க்கு இடைப்பட்ட பல வீதிகளுக்குள் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை நுழைவதைத் தவிர்க்குமாறும் உரிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment