முஸ்லிம் எதிர்ப்பு காட்டும் திகாம்பரம் - திலகர்
- எஸ்.சதீஸ் -
உள்ளுராட்சி தேர்தலில் மலையக அரசியல் அரங்கமானது ஐக்கிய தேசிய கூட்டமைப்பு எனும் தேசிய கூட்டணியிலே தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றது. அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான நான் நுவரெலியா மாவட்டத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட முகவராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். எனது தலைமையிலேயே வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக சகோதரர் நயீமுல்லா செயற்படுகிறார். இதனைக் காரணம் காட்டி திலகர் இஸ்லாமியர்களுடன் இணைந்து செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் திகாம்பரமும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீ தரனும் சொல்லித் திரிவதாகக் கேள்விப்படுகிறோம். அரசியல் லாபத்துக்காக சந்தர்ப்பவாத இனவாதம், மதவாதம் பேசும் திகாம்பரமும், ஶ்ரீதரனும் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
மஸ்கெலிய பிரதேச சபைக்காக பட்டியல் வேட்பாளராகப் போட்டியிடும் சகோதரி ரஷீதாவை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திகாம்பரம் போட்டியிடும்போது ஐக்கிய தேசிய கட்சிச் செயலாளர் கபீர் ஹாசிம் என்பதையும் 2011 ஆம் ஆண்டு சோ. ஸ்ரீதரன் அம்பகமுவை பிரதேச சபைத் தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு 210 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தபோது அவர் போட்டியிட்ட மயில் சின்ன கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பதும் அதன் செயலாளர் சகோதரர் வை. எஸ். எல். ஹமீட் என்பதையும் இவர்கள் இருவரும் மறந்துவிட்டார்களா?
தொழிலாளர் தேசிய முன்னணி , மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தனித்தனி சின்னங்கள் இருக்கும்போது அவை மூன்றும் இணைந்த தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் தனியான சின்னம் இருக்கும் போது நான்காவதாக தொலைபேசி சின்னத்தினை ஏன் இரவல் வாங்கி இவர்கள் ஏன் போட்டியிட வேண்டும். அரிவாள், மண்வெட்டி, ஏணி, டோர்ச் லைட் எனும் நான்கு சின்னங்களையும் எதற்கு நாக்கு வழிக்கவா வைத்து இருக்கிறார்கள் என கேட்க விரும்புகிறேன்.
எனவே சந்தர்ப்பவாதத்துக்காக மதவாதம் பேசும் மலினப் பிரசாரத்தை இவர்கள் கைவிட வேண்டும். அவர்களது தொலைபேசி கட்சித் தலைவர் சிங்களவர் என நாங்கள் சொல்லப் போவது இல்லை. ஹட்டன் நகர சபையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் சகோதரர் மதீனாஸ் முஸ்தக்கீம் முஸ்லிம் இல்லை என்றும் அவர்களால் கூற முடியாது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். அவர்கள் ஹட்டனில் முஸ்தக்கீமுக்கு வாய்ப்பு வழங்கி இருப்பதுபோலத்தான் பொகவந்தலாவையில் சகோதரி ஆமினாவுக்கும் மஸ்கெலியாவில் சகோதரி ரஷீதாவுக்கும் நாங்கள் வேட்பாளர்களாக வாய்ப்பு வழங்கி உள்ளோம்.
> சகோதரி ரஷீதா 'தேயிலை எம் தேசம்' எனும் அமைப்பின் ஊடாக பிரதேச செயலக போராட்டத்தில் எம்மோடு இணைந்தவர். இன்று அதன் தலைவர் ரவியை நாங்கள் விலக்கி வைத்த பிறகு திகாம்பரமும் உதயகுமாரும் அவரை விலைக்கு வாங்கி உள்ளார். அது திகாம்பரம் எங்களுக்குச் செய்த மொத்தப் பெரிய உபகாரம். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரை உங்கள் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளங்கள். உங்களுக்கு நடக்க வேண்டிய எல்லா நன்மைகளுமே நன்றாக நடக்கும் எனவும் தெரிவித்தார்.
நுவாரேலியா மாவட்டத்தில் முஸ்லிம்கள் ஒரு போதும் எந்த தோட்ட காட்டனுக்கும் வாக்காளிக்க கூடாது. கண்ணை மூடிக்கொண்டு சிங்கள அரசியல்வாதிகளுக்கு வாக்காளித்துவிடுங்கள். இந்த நாய்களை போல் அவர்கள் நன்றி கெட்டவர்களில்லை. கண்டியில் முஸ்லிம்கள் வாக்காளிக்காமல் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெற முடியுமா இவர்களால்
ReplyDeleteஇந்தவகையில் இனத் துவேசத்தைக் கிளப்பும் எந்தப் பிரயோசனமும் இல்லாத வகையில் கருத்துத் தெரிவிப்பதை தயவு செய்து தவிர்த்துக் கொண்டால் அனைவருக்கும் நல்லது.
ReplyDelete