நடுவானில் விமானியின் தோளில் சாய்ந்த பயிற்சியாளர், ஜோக் அடிப்பதாக நினைத்த பைலட் - உண்மை தெரிந்து அதிர்ச்சி
இங்கிலாந்தின் லங்காஷைர் பகுதியில் 57 வயது மூத்த விமான பயிற்சியாளர் மற்றும் அவரிடம் பயிற்சி பெறும் விமானி ஆகியோர் பிளாக்பூல் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஒற்றை என்ஜின் கொண்ட பைப்பர் பி.ஏ.-28-161 என்ற அந்த விமானம் ஓடுபாதையில் செல்லும்போது அவர்கள் இருவரும் நன்றாக பேசிக் கொண்டு இருந்து உள்ளனர். விமானம் உயரே சென்றபோது, பயிற்சியாளரின் தலை திடீரென சரிந்து உள்ளது. ஆனால், அவர் தூங்குவது போன்று நடிக்கிறார் என விமானி நினைத்து உள்ளார்.
புறப்படும்போது அவரது உடல்நிலை நன்றாக இருந்ததால் விமானி எதிர்மறையாக எதையும் நினைக்காமல், விமானத்தில் ஒரு சுற்று சுற்றி வந்து உள்ளார்.
ஆனால் சிறிது நேரத்தில் பயிற்சியாளரின் தலை, விமானியின் தோளில் சாய்ந்து உள்ளது. அப்போதும், நகைச்சுவைக்காக அவர் அப்படி செய்கிறார் என நினைத்தபடி, தொடர்ந்து விமானத்தை செலுத்தி உள்ளார்.
விமானம் தரையிறங்கிய பின்னரும் பயிற்சியாளர் பதில் எதுவும் அளிக்காமல், எழுந்திருக்காத நிலையில், அதிர்ச்சியடைந்த விமானி அவசரகால விமான பணியாளர் ஒருவரை உதவிக்கு அழைத்து உள்ளார். ஆனால், அந்த பயிற்சியாளரை காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு. முன்பே உயர் ரத்த அழுத்தம் இருந்து உள்ளது என்றும், அதற்காக மருந்து எடுத்து வந்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அவரது பிரேத பரிசோதனை முடிவில், மாரடைப்பினால் அவர் உயிரிழந்து உள்ளது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமான விபத்துகள் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணை முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Post a Comment