Header Ads



இலங்கையர்கள் குறித்து, ஓமான் அமைச்சரின் மகிழ்ச்சியான தகவல்


இலங்கையில் பயிற்சி பெற்ற நிபுணர்களுக்கு ஓமானில் போதுமான வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், தகுதிகள், அனுபவம் மற்றும் தொழில் நிபுணத்துவம் உள்ள எந்தவொரு இலங்கையர்களுக்கும் ஓமானில் வேலை வாய்ப்பு உண்டு என்றும் ஓமானின் தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் மஹத் சைட் பவான் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் தெரிவித்துள்ளார்.


 ஓமானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆள் கடத்தலைத் தடுப்பது, வேலைவாய்ப்பு ஒப்பந்த முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறையை அமைப்பது மற்றும் இலங்கை தொழில் வல்லுநர்களுக்கு ஓமானில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஓமானின் தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் மஹத் சைட் பவானுடன் இன்று -09- விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


 ஓமனுக்கு அமைச்சரின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் முக்கிய நோக்கங்கள், நடந்து வரும் மனித கடத்தலைத் தடுக்க அதிகபட்ச இராஜதந்திர நடவடிக்கைகளை செயல்படுத்துவது மற்றும் நாட்டில் பயிற்சி பெற்ற நிபுணர்களுக்கு ஓமானில் அதிக வேலை வாய்ப்புகளைத் திறப்பது ஆகியவை அடங்கும்.  இதன்படி, ஆள் கடத்தலை தடுப்பதற்கும், இலங்கை தொழில் வல்லுநர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கும் இரு நாடுகளும் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஓமான் தொழிலாளர் அமைச்சருடன் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.


1 comment:

  1. இலங்கையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் எங்கே? தொழில் திறமையைும் பயிற்சியும் பெற்ற நிபுணர்கள் எந்த நாட்டுக்கு அனுப்பப்படுகின்றார்கள். பொதுமக்களுக்கு கலர் காட்டும் நாடகங்கள் பொதுமக்களின் பணத்திலிருந்து தொடர்ந்து வீண்விரயம் செய்து நாடகங்கள் நடந்தேறுகின்றன. இறுதியில் பயிற்சியுமில்லை, நிபுணத்துவமுமில்லை. முடிவு எச்சம் சொச்சமிருந்த டொலர்களையும் கடலில் கரைத்துவிட்டு வருவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.