Header Ads



இலங்கை வர்த்தகரை கொலை செய்த, பிரேஸில் மனைவி எங்கே..? சர்வதேச பொலிஸாரின் உதவி நாடல்


இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மனைவி மற்றும் உதவியாளரைக் கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஊடாக பிரேஸில் பொலிஸாரின் உதவியை குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளது.


கடந்த 3ஆம் திகதி, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒனேஷ் சுபாசிங்கவின் சடலம் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கண்டெடுக்கப்பட்டது.


இதன்படி, நாட்டின் புலனாய்வுத் திணைக்களங்கள், நாட்டின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.


இதற்கமைய, ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி ரோசா சில்வா, நான்கு வயது மகள் மற்றும் பிரேசில் நாட்டு பணிப்பெண் ஆகியோர் கடந்த 3ஆம் திகதி தோஹா சென்றிருந்தமை தெரியவந்திருந்தது.


இந்நிலையில், குடும்பத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி மற்றும் உதவியாளரைக் கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஊடாக பிரேஸில் பொலிஸாரின் உதவியை குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளது.


இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவிக்கையில்,


இந்தோனேஷியாவின் ஜகார்த்தா பொலிஸாரிடமும் பிரேஸில் பொலிஸாரிடமும் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


ஒனேஷ் சுபசிங்கவின் பிரேஸில் மனைவியும் அவரது உதவியாளரும் தற்போது பிரேஸிலில் இருப்பதாக உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் கிடைத்துள்ளதால், பிரேஸில் பொலிஸாரிடம் இரகசியப் பொலிஸார் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்த விசாரணையில், ஒனேஷ் சுபசிங்கவின் சகோதரரான சுபாஷ் சுபசிங்க மற்றும் ஒனேஷின் வீட்டில் பணிப்பெண்களாக பணிபுரியும் ஐந்து பெண்களிடம் அதிகாரிகள் இதுவரை வாக்குமூலம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. TW

No comments

Powered by Blogger.