Header Ads



சர்வதேசத்தின் உதவிகள் வந்துகொண்டு இருக்கிறது - ராஜாங்க அமைச்சர்


கடினமான சூழ்நிலையில் பொருளாதார நிலைமையை நிர்வகிக்கும் நேரத்தில் தேர்தலுக்கு நிதி வழங்குமாறு திறைசேரி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதை பல்வேறு பிரிவினரும் நிறுத்த வேண்டும்  என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார்.


ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற அழுத்தங்களைக் கொண்டுவரும் பல்வேறு பிரினரும் சம்பளம், ஓய்வூதியம், சமூகப் பலன்கள் மற்றும் மருந்துகளை வாங்குவதற்கு அரசாங்கம் நிதி திரட்டுவதில் உள்ள சிரமங்களை உணர வேண்டும் என்றார்.


செலவினங்களைக் குறைத்து, கிடைக்கும் நிதியை நிர்வகிப்பதுடன், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் தற்போதைய நிலைமையை சமாளிக்காவிட்டால் மீண்டும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்  என்றும் தெரிவித்தார்.


இந்த வருட இறுதிக்குள் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் சர்வதேசத்தின் உதவிகள் வந்துகொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


1 comment:

  1. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பாராளுமன்றம் அங்கீகரித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை அரசாங்கம் தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பாமல் திறைசேரிக்கு அனுப்பி தேர்தல் ஆணையாளருக்கு தொந்தரவு கொடுத்து, தற்போது இந்த இராஜாங்க மந்தி(ரி) ஆணையாளரை சிறுபிள்ளையாக கணித்து,நாடு நெருக்கடியில் இருக்கும் போது தேர்தலுக்கு பணம் கேட்டு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் எனக்கூறும் இந்த கழுதையைச் சார்ந்தவர்களின் பின்னணி பற்றி இந்த நாட்டு மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை பாராளுமன்றத்தில் உள்ள மாபெரும் கள்ளக்கூட்டம் விரைவில் தெரிந்து கொள்ளும். பொதுமக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் இந்தக் கள்ளக்கூட்டம் மிகவிரைவில் பாடம் கற்றுக் கொள்ளும் என்பதை பொதுமக்கள் விரைவில் நிரூபிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.