மீன் பூனைகளின் நடமாட்டம், தினமும் அச்சத்துடன் மக்கள் - நாய்கள், கோழிகளை கொன்று தின்கின்றன
மீன்பூனைகள் தங்களுடைய குட்டிகளுடன் இவ்வாறு நடமாடுகின்றன. பற்றைக்காட்டுக்குள் வசிக்கும் இவ்வாறான மீன்பூனைகள், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்கள், கோழிகளை கொன்று தின்றுவிடுகின்றன என்றும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, நேற்று (21) சுற்றித்திரிந்த மீன்பூனைகள் தொடர்பில், நல்லத்தண்ணி வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, தோட்டத்துக்கு விரைந்த அதிகாரிகள், மீன்பூனைகளின் நடமாட்டத்தை அவதானித்தனர்.
தோட்டங்களுக்கு அண்மையில் இருக்கும் பற்றைக்காடுகளுக்கு தீ மூட்டுவதால், இவ்வாறான மிருகங்கள், குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மீன்பிடி பூனைகள் மனிதர்களுக்கு எவ்விதமான தீங்குகளையும் விளைவிக்காத போதிலும், செல்லப்பிராணிகளை கொன்று தின்றுவிடுகின்றன என மக்கள் தெரிவித்துள்ளனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ
Post a Comment