பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த ஹிருணிகா
கல்வி அமைச்சிற்குள் நுழைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஹோமாகம - பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 50 இற்கும் மேற்பபட்டோர் நேற்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அமைதியின்மையின் போது கல்வி அமைச்சிற்குள் பாடசாலை ஆசிரியர் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட சிலரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களை பார்வையிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நேற்றிரவு தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
இதன்போது பொலிஸ் நிலைய அதிகாரிகள், ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரின் குழுவினருக்கு கைதானவர்களை பார்வையிட சந்தர்ப்பத்தை வழங்காததால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஹிருணிகா பிரேமச்சந்திர, “OIC வீட்டில் தூக்கமா? நான் சென்று அழைத்து வரவா?” என ஆவேசமாக கேட்டுள்ளார். TW
Post a Comment