மக்கள் புகட்டிய சிறந்த பாடம்
பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் சிலர், உள்ளூராட்சி தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குத் தேவையான பணத்தை வழங்கும் பொருட்டு, தபால் நிலையத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ‘காசுக் கட்டளை’ அனுப்பும் நிகழ்வு இன்று (22) பாதுக்கை தபால் நிலையத்தில் இடம்பெற்றது.
இங்கு பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் குழு ஒன்று பாதுக்க தபால் நிலையத்திற்கு வந்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் பெயருக்கு நூறு ரூபாவிலிருந்து ஐநூறு ரூபா வரை காசுக்கட்டளைகளை அனுப்பி வைத்துள்ளனர்.
அரசியலமைப்பு ரீதியாக தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதால் தேர்தலை நடத்தி மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு, தாம் உழைத்த பணத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மக்களின் எண்ணத்தையும் செயலையும் நாம் பாராட்டுகின்றோம். அவர்களின் செயல் உண்மையில் பரந்த மக்களின் அடிப்படைகளைப் பெற்றுக் கொள்ளும் நல்லெண்ணத்திலிருந்த வந்தது. ஆனால் அந்த உணர்வை இந்த வீணாப் போன அரசாங்கத்தால் கண்டிப்பாகப் புரிந்து கொள்ள மமுடியாது. புரிந்து கொள்ள தயாராகவும் இல்லை. ஏனெனில் இந்த தேர்தல் வந்தால், ரணிலின் அடிப்படை நோக்கமான ராஜபக்ஸக்களைப் பாதுகாக்கும் அடிப்படைக்கடமையைச் செய்ய இயலாது போகும்.
ReplyDelete