இலங்கையர்களிடம் துருக்கி தூதுவரின் உருக்கமான கோரிக்கை
- NM . Ameen -
துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள அகோர பூகம்பம் குறித்து கொழும்பிலுள்ள துருக்கிய தூதுவர் திருமதி ரகிபே டெமத் செக்ரா இக்லுவுடன் தொடர்பு கொண்டு வினவினேன்.
மீட்பு பணிகள் தொடர்கின்றன இறந்தவர்களது விபரங்கள் எத்தனை என்று கூற முடியாதுள்ளது என்றார்.
எங்கள் நாட்டு மக்களுக்காகப் பிரார்த்தியுங்கள் என எம்மால் என்ன செய்ய முடியும் எனக் கேட்ட போது தூதுவர் தெரிவித்தார்அதுவேநீங்கள் செய்யும் உதவி என்றார்.துருக்கிய மக்களுக்காகப் பிரார்த்திப்போம்.
ஆம் நிச்சியமாக நாம் பிரார்த்தனை செய்வோம். ஒரு சில வினாடிகளில் அந்த நாட்டு குறிப்பாக துருக்கி, சிரிய நாட்டு மக்களுக்கு வந்த இடர், துன்பம், சோகம் எம்மைக் கண்கலங்கவைக்கின்றது. இதே நிலைமை நமக்கு ஏற்பட்டால் என்ன என சிந்திக்க வைக்கிறது. சாதாரண வாழ்க்ைகயில் பல்வேறு நிலைமைகளில் இருந்த அந்த மக்களை ஒரு சில வினாடிகளில் 8000மேற்பட்ட மக்களுக்கு நிகழ்ந்த மரணம் உலகில் யாருக்கும் ஏற்படக்கூடாது என நாம் பிரார்த்தனை செய்கின்றோம். யா அல்லாஹ் உன்னுடைய நுணுக்கமான மிகவும் சரியான திட்டத்தில் அகப்பட்டு இறையடி சேர்ந்த குழந்தைகள், பிள்ளைகள், பெண்கள், தாய்மார்கள், வயோதிபர்கள்,இளைஞர்கள், யுவதிகள், ஆண்கள், பெண்கள் அத்தனை பேரையும் யாஅல்லாஹ் ஷுஹதாக்களாக அவர்களை அங்கீகரித்து உன்னுடைய சுவனத்து மாளிகையில் அவர்களுக்கு வழங்கி அருளுவாயாக. அவர்கள் செய்த பாவங்களை மன்னித்து, அவர்களுடைய குற்றம் குறைகளை மறைத்து, அவர்கள் செய்த நற்செயல்களைக் கொண்டு அவர்களை அங்கீகரித்து அவர்களுக்கு நிரந்தர சுவனத்தை வழங்குவாயாக. அந்த இடரில் சிக்கி காயப்பட்டு உயிர்பிழைத்த மக்களுக்கு அவர்களுடைய இடரிலிருந்து காப்பாற்றி அவர்களுக்கு விரைவான சுகத்தையும், ஆரோக்கியத்தையும் அருளுவாயாக. இறையடி சேர்ந்த் அடியார்களின் இழப்பு, காயப்பட்டவர்களுடைய உறவினர்களுக்கு பொறுமையைும் சகிப்புத்தன்மையைும் அருளி, இந்த நெருக்கடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவாயாக. இது போன்ற பாரிய இழப்பையும், நெருக்கடிகளையும் எங்களைப் போன்ற அற்ப மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாது யாஅல்லாஹ். இந்த நிலைமைகள், நெருக்கடிகள் எங்கும் திரும்பவும் வராது உலகில் வாழும் அத்தனை மக்களையும் காப்பாற்றுவாயாக. எங்கள் பணிவான பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக யாஅல்லாஹ். மக்களின் சோதனைகளையும் நெருக்கடிகளையும் நீ, நன்றாக அவதானித்துக் கொண்டு, அவர்களின் ஓலங்களையும், ஓசைகளையும் நன்கு கேட்பவனும் நீதான். எங்கள் இரட்சகனே! மக்களுக்கு உண்மையையும் சத்தியத்தையும் புரிந்து அவற்றைப் பின்பற்றும் மனதையும் அதற்கான வழிவகைகளையும் அவர்களுக்கு இலகுவாக்கி அருளுவாயாக. தவறுகளில், வழிகேட்டில் மூழ்கியிருக்கும் மக்களுக்கு நல்ல புத்தியையும் சிந்தனையையும் அருளி அவர்களின் தவறான போக்கிலிருந்து அவர்களைத் திசை திருப்பி நல்ல இறைநம்பிக்ைகயுடைய மக்களாக அவர்கள் வாழ உதவி செய்வாயாக. எங்கள் பணிவான துஆவை ஏற்றுக் கொள்வாயாக.
ReplyDeleteAameen Yarabbal Alameen , Jazakallah Khaira brother for your heart touching writing.
DeleteIt is very kind of you, please keep on praying our breaved brothers and martyers who accepted the call of the creator -Allah.
DeleteTHANK YOU SIR,
ReplyDelete