ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டில் மஹிந்த
13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தற்போது அவசியமானது என நடப்பு அரசாங்கம் கருதினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதனை முற்றாக மறுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (24.02.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“நடப்பு அரசாங்கம் தற்போது 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியமானது என கருதுகின்றது.
ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதனை முற்றாக மறுப்பதுடன் அது தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம்
இதேவேளை, மக்களின் உரிமைகளை நிலைநாட்ட 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானதாகும்.
மக்களின் தேவைகளைத் தீர்மானிக்கும் ஒரே வழி, தற்போதைய நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது.
அத்துடன், தேர்தலை நடத்து அரசாங்கத்தின் கடமையாகும்."என தெரிவித்துள்ளார்.
இரவு மஹிந்த வீட்டில் ரணிலும் மஹிந்தவும் புரியாணி சாப்பாடு திண்டு கழிக்கும் போது பகலையில் ரணிலின் திட்டத்தை மஹிந்த எதிர்ப்பதும் அதற்கு எதிரான அறிக்கை விடுவதும் இந்த நாட்டு மக்கள் கடந்த எழுபது வருடங்களாக காணும் காட்சிகள். இன்னமும இந்த நாடத்தைப் பார்த்து ரசிக்க பொதுமக்கள் தயாராக இல்லை என்பதை தற்போது பொதுமக்கள் மிகவும் தௌிவாகக்கூறிவிட்டனர். அதனை செயல்படுத்திக் காட்டுவதற்குத் தான் உள்ளூராட்சித் தேர்தலை நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர். ஆனால் மணல் குவியலில் தலையை அமுக்கிக் கொண்டு உடம்பெல்லாம் வௌியில் தெரிய நான் மறைந்து விட்டேன் என சத்தம் போடும் கொரவக்கனைப் போல அரசாங்கம் செயல்படுகின்றது. நாட்டின் சட்டத்தை சனாதிபதி மீறினால் மேல் நீதிமன்றம் கொடுக்கும் உச்ச தண்டனை என்ன என்பதை அறிந்த கொள்ள பொதுமக்கள் ஆவலாக இருக்கின்றார்கள்.
ReplyDelete