என் வீட்டை தீ வைத்துக் கொளுத்தி, உடைகளை களைந்து கொன்று விடுவோம் என எச்சரிக்கை
நடிகை திருமதி தமிதா அபேரத்ன, தான் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் மேடையில் பிரவேசித்ததால் கோபமடைந்த சிலர் தம்மை அச்சுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
தன் வீட்டை தீ வைத்துக் கொளுத்துவோம், உடைகளை களைந்து கொன்று விடுவோம் என்று கூறியதாகத் தெரிவித்தார்.
கோத்தபாய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்வதற்கான போராட்டத்தில் தான் மாத்திரம் இணைந்து செயற்பட்டதாகவும், போராட்டத்தின் இலக்குகள் சுதந்திரமாக அடையப்படும் என நினைக்கும் அரசியல் மேடையில் பிரவேசிப்பதற்கு தனக்கு உரிமை இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி மூலம் சாதிக்க முடியும் என்று நினைத்ததால் அந்தத் தளத்தை தேர்வு செய்ததாக அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment