Header Ads



ரஷ்ய குடும்பத்தை தப்பியோடச் செய்த இலங்கை யானை


ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனம் ஒன்று காட்டுயானையால் தாக்கப்பட்ட சம்பவம் பொலன்னறுவை மின்னேரியா தேசிய பூங்காவில் பதிவாகியுள்ளது.


8 வயது மற்றும் 10 மாத வயதுடைய இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு ரஷ்ய குடும்பம் காட்டு யானையின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற போது அவர்களை யானை துரத்தியுள்ளது, அவர்கள் ஓடத் தொடங்கி வாகனத்தில் ஏறிய போதும்  யானை வாகனத்தைத் தாக்கி சேதப்படுத்தியது  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்துடன் பொலன்னறுவைக்கு சுற்றுலா சென்ற குடும்பம், திரும்பி வரும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.



No comments

Powered by Blogger.