Header Ads



பெட்ரோல் விலை அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)


இன்று -01- நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளது.


இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய , புதிய விலை லீட்டருக்கு ரூபா 400 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தத்துடன், லங்கா ஐஓசியும் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 பெட்ரோலின் விலையை 30 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.


எனினும், ஏனைய ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அறிவித்துள்ளது.





No comments

Powered by Blogger.