உங்கள் மனைவிமார்கள் மறுமணம் முடித்துவிட்டனர்
கல்லறை வாசிகளே!
✅✅✅✅✅✅✅✅
உங்கள் மனைவிமார்கள்
மறுமணம் முடித்துவிட்டனர்!
உங்கள் சொத்து சொல்வங்கள்
பங்கீடு செய்யப்பட்டுவிட்டன!
உங்கள் வீடு வாசல்கள்
குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டன!
உங்கள் சேவகர்கள் மற்றோரால்
பயன்படுத்தப்பட்டுவிட்டனர்!
இது நம்மிடம் உள்ள தகவல்கள்!
உங்களிடம் என்ன தகவல்கள்
உள்ளதென அறிய ஆசைப்படுகிறோம்!
எனக்குத் தெரியும்!
உங்களால் வாய்பேச
முடியுமானால், நீங்கள்
இப்படித்தான் சொல்வீர்கள்:
"எந்த சொத்து செல்வங்கள்
வேண்டுமானாலும் சேமித்துக் குவியுங்கள்!
தக்வா என்னும் அறநெறி வாழ்வே இங்கே மிகச் சிறந்த துணைச்சாதனமாகும், சிறப்பான சேமிப்புக் கணக்காகும்!"
✍ அலி இப்னு அபீ தாலிப் (ரழி)
📖 நூல் / டமஸ்கஸ் வரலாறு
தமிழாக்கம் Imran Farook
Post a Comment