தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிக்கு ஆதரவாக அரச அச்சகர்..?
தேர்தலுக்குத் தேவையான அச்சுப்பணிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு அவசியம் தேவைப்படுவதாக நேற்று (15) ஊடகங்களுக்கு அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பான முறையில் அச்சிடும் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 65 பொலிஸாரேனும் தேவைப்படுவதாக அரச அச்சகர் கங்கானி கல்பனி லியகே கூறினார்.
பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமையினால், பாதுகாப்புத் தரப்பினரை ஈடுபடுத்தி அச்சிடும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முயற்சித்தாலும், அச்சக சேவையாளர்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, 6 இலட்சம் வாக்குச்சீட்டுகள் என்பது மிகவும் குறைந்த தொகை எனவும் அரச அச்சகத்தில் காணப்படும் அச்சிடும் திறனுக்கு அமைய, ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அதனை அச்சிட முடியும் எனவும் குறிப்பிட்ட அரச அச்சக ஊழியர் சங்கத்தினர், அச்சிடும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர்.
தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிக்கு ஆதரவாக அரச அச்சகர் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் தமக்கு எழுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
Post a Comment