இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிங்களின் உதவிக்கரம் - துருக்கி, சிரியா நாடுகளுக்கு நிவாரண உதவிகள்
குறித்த நிறுவனத்தினூடாக சேகரிக்கப்பட்ட ஒரு தொகை நிவாரண உதவியானது துருக்கி நாட்டைப் போய்ச் சேர்ந்தது. குறித்த நிறுவனத்தின் உறுப்பினர்களில் ஒரு சாரார் கடந்த வெள்ளியன்று நேரடியாகவே துருக்கி சென்ற நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கள விஜயங்களை மேற்கொண்டு, பயனாளர்களுக்கு சேகரிக்கப்பட்ட நிவாரணங்களை வழங்கி வைக்கின்ற உயரிய பணியில் தற்போது தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். அல்ஹம்து லில்லாஹ்.
குறித்த உதவிகளாவன, பயனாளர்களின் கரங்களைச் சென்றவடைவதில் இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம் சமூகம் பாரிய பங்களிப்பைச் செய்திருந்ததுடன், fபிதா நிறுவனமானது நிவாரண உதவிகளைச் சேகரித்து, அவற்றைத் தேவையுடையோரின் காலடிக்குக் கொன்று சேர்க்கும் உயரிய பணியைச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றது.
குறித்த உயரிய வணக்கத்தினூடாக அல்லாஹ்வின் நெருக்கம் பெற நிதி மற்றும் பொருளாதார உதவிகள் மூலம் தமது நிறுவனத்திற்குத் தாராளமாக பங்களிப்புகளைச் செய்திருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்குக்கும் குறித்த நிறுவனத்தின் பரிபால சபை உறுப்பினரகள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா நாடுகளை நோக்கி உலகளவில் பல்வேறு அமைப்புக்களின் உதவிகளும் விரைந்து கொண்டிருக்கின்ற அதே வேலை இலங்கை நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்து இங்கிலாந்தில் வசித்து வருபவர்களால் அன்மைய அனர்த்ததின் பின்பு முதன்முதலாக கொண்டு சேர்க்கப்பட்ட நிவாரண உதவிகள் இவையாகும்.
மஸ்ஜித் fபிதா.
லெஸ்டர், இங்கிலாந்து.
UK.
21.02.2023
Post a Comment