Header Ads



இப்படி வரும் தகவல்களை நம்பாதீர்கள்


உங்களுக்கு லொத்தர் சீட்டில் பரிசு விழுந்ததாக தெரியாத நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு அல்லது வட்ஸ்அப் செய்தி வந்திருந்தால் அது நிச்சயமாக பொய்யும் மோசடியுமாகும் என இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.


நீங்களும் இவ்வாறான மோசடிக்கு ஆளாகியிருந்தால் அல்லது அவ்வாறான மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தெரிவிக்குமாறு நிதிப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


பணம் வைப்பு செய்யப்பட்ட / வைப்பு செய்யப்படுவதாகக் கூறப்படும் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், சம்பந்தப்பட்ட வங்கி, கைத்தொலைபேசி எண் மற்றும் தொடர்புடைய செய்திகளின் ஸ்கிரீன் ஷொட்களுடன் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.