Header Ads



கொரோனா ஜனாஸாக்களை அடக்க வேண்டுமென நான் குரல் கொடுத்தேன் - எதிர்க்கட்சித் தலைவர்


சம்மாந்துறை மக்கள் மாத்திரமன்றி முழு முஸ்லிம் சமூகமும் இந்த மொட்டுவின் அற்ப அரசியலால் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியதாகவும், இனவாதம் மற்றும் மதவாதம் முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை சீரழித்ததாகவும், நாட்டை அழித்த ராஜபக்சர்களே இந்த இனவாதத்தையும் மதவாதத்தையும் உருவாக்கினார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (31) சமாந்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


ராஜபக்சர்கள் இனவாதத்தாலும் மதவாதத்தாலும் நாட்டை அழித்த போதிலும்,ஐக்கிய மக்கள் சக்தி,ஐக்கிய, ஒன்றிணைந்த ஒரு நாட்டை உருவாக்க பாடுபடுகிறது எனவும்,நீங்களும் நானும் ஒரு தாய் தந்தையின் பிள்ளைகளாக பணியாற்றும் நாட்டை உருவாக்கவே செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் இந்நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவது ஒரு தண்டனைக்குரிய குற்றச் செயலாக மாற்றி,இந்த கொடூரமான இனவாதத்தையும் மதவாதத்மையும் எமது நாட்டிலிருந்து இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


கோவிட் சமயத்தில் தகனமா? அடக்கமா? என்ற நிலைப்பாடு வந்த இந்த விவகாரத்தில் அனைத்து தலைவர்களும் கோழைகள் போல் செயல்பட்டனர் எனவும்,எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் தான் அதற்கு எதிராக குரல் எழுப்பியதாகவும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. உங்களுடைய குரல் அழுத்தமாக இருந்திருந்தால் அந்தப் பேயனுககு அவ்வளவு அநியாயத்துக்கு எதிராக பிடிவாதமாக இருந்திருக்கமுடியாது என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.