Header Ads



இது சிங்கள பௌத்த நாடு என்றார் வீரசேகர, அடி முட்டாள் என்றார் கஜேந்திரன்


இலங்கை தீவின் பங்காளர்களாக இருக்கக்கூடிய தமிழர்களுடைய தேசத்தை அங்கீகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட, இறைமை அங்கீகரிக்கப்பட்ட, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட ஒரு புதிய சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் ஆக்கபூர்வமாக நாட்டை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் இன்றைய தினம் -09- கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


இந்த சந்தர்ப்பத்தில் குறிக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, “இலங்கையை சிங்கள பௌத்த நாடு இல்லை என செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்.

புராதன குருந்தூர் மலை விகாரைக்கு சென்று மலர் வைத்து வழிபடுவதற்கு கூட தேரர்களுக்கு தடை செய்து விட்டு இங்கு வந்து இவ்வாறு பேசுவதற்கு இடம் இருப்பது இது சிங்கள பௌத்த நாடு என்பதால் தான்.


சிங்களவர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்று வாழ்வதற்கு உரிமை இல்லை என்று இவர் இங்கு குறிப்பிடுகிறார். இது சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் தப்பிப்பிழைத்து இங்கு வந்து இதனை அவரால் கூற முடிந்தது” என சுட்டிக்காட்டியுள்ளார்.


இதற்கு செல்வராசா கஜேந்திரன் பதிலளிக்கையில், சரத் வீரசேகரவைப் போன்ற இனவெறியர்களால் தான் இந்த தீவில் இரத்த ஆறு ஓடியது. இலங்கை 30 ஆண்டுகளாக இரு நாடுகளாக பிரிந்திருந்தது.


பச்சை இனவாதிகளை வைத்துக்கொண்டு நாட்டை மேலும் மேலும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லாதீர்கள். இவர் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டபடியால் தான் கோட்டாபய ராஜபக்ச சொந்த மக்களால் விரட்டியடிக்கப்படுகின்ற நிலைக்கு வந்தார்.


சரத் வீரசேகர அடிமுட்டாள். இவர்போன்றவர்களின் கதைகளை கேட்டு கோட்டா, மகிந்த தெருவிற்கு வந்தது போன்று ஏனையவர்களும் எதிர்காலத்தில் தெருவிற்கு வரக்கூடாது என்றால் தயவு செய்து நிதானமாக சிந்தியுங்கள். 

1 comment:

  1. சிறுபான்மை மக்களுக்கு எதிராக கோதபாயாவின் செயற்திட்டத்தைப் பாராளுமன்றத்தில் முன்னெடுத்துச் செல்வதற்காக அவனால் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முக்கிய துவேசிதான் இந்த சரத் வீரசேகர என்ற காபிர். இவனைப் பொதுமக்கள்தான் பாராளுமன்றத்திலிருந்து துரட்சி பண்ண வேண்டும். இவனுடைய தொழில் பாராளுமன்றத்திலும் வௌியிலும் இனத் துவேசத்தையும், இன வெறியையும் மக்களிடையே பரப்புவதுதான் இவனுடைய தொழில். பொதுமக்களின் நன்மைக்காகவும், குறிப்பாக மக்களுக்கு நல்வழியைக் காட்டி அவர்களை நல்ல பிரஜைகளாக வாழவைக்கும் உன்னத இலட்சியத்துடன் வாழ்க்கையையே மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களைப் பயங்கரவாதி என குற்றம் சாட்டி ஏறத்தாழ ஒரு வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைக்க முழுக்காரணம் இந்த காபிரான இனத்துவேசியின் குற்றச் சாட்டு பொய்யானது என சென்ற வாரம் உயர்நீதிமன்றம் அனைத்துக் குற்றச் சாட்டுகளிலிருந்தும் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை விடுதலை செய்தது. ஆனால் அவர் எதிர்நோக்கிய நெருக்கடிகள், சோதனைகள், அவமானம் பொதுமக்களிடை யே அவரை அவமானப்படுத்தி கேவலப்படுத்தியமைக்கு யார் நட்டஈடு கொடுப்பார்கள். இவ்வாறு அப்பாவி மக்களை பொய்க்குற்றச் சாட்டுபவர்களுக்கு நீதிமன்றம் என்ன தண்டனை வழங்குகின்றது என்பதை அறிய பொதுமக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.