கட்டாரில் கல்முனை ஸாஹிரா தொடர்பில் கலந்துரையாடல்
- அஸ்ஹர் இப்ராஹிம் -
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் கல்வி மற்றும் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்தல் தொடர்பில் கல்லூரியின் 2010 /2013 காலப் பகுதியில் இக் கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர் கத்தாரில் 2வது முறையாக ஒன்றிணைந்தனர்.
கடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரணதரம் மற்றும் 2013(க.பொ.த) உயர்தர கல்வியாண்டுகளில் கல்வி கற்று வெளியேறிய நண்பர்களை ஒன்றினைக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று கூடலானது கட்டாரில் அமைந்துள்ள அஸ்வாயிர் பெமிலி றிஸோட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் கத்தாரில் பணிபுரியும் சுமார் 30க்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் நிகழ்வின் உன்னதமான நோக்கம் சபையோருக்கு எத்திவைக்கப்பட்டது.
Post a Comment