பூமியின் மையத்தில் மாபெரும் நெருப்புக் கோளம் - ஆய்வில் கண்டுபிடிப்பு
நமது பூமியின் மையத்தில் மாபெரும் நெருப்பு கோளம் உள்ளது. பூமியின் சூட்டை காப்பது அதுதான்.
சமீபத்தில் இந்த நெருப்பு கோளம் குறித்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியானது.
இந்த கோளம் தனியாக உட்பகுதியில் சுற்றிக்கொண்டு இருக்கும். அதாவது ஒரு பந்துக்குள் இன்னொரு பந்து இருப்பதைப் போன்றது.
மேலே இருக்கும் பந்து ஒரு வேகத்தில் சுற்றுகிறது. உள்ளே இருக்கும் பந்து இன்னொரு வேகத்தில் சுற்றுகிறது. அப்படிதான் பூமியின் மையத்தில் இருக்கும் இந்த கோளமும் சுற்றிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் பூமி மையத்தில் இருக்கும் கோளத்திற்கு உள்ளே இன்னொரு கோளம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
Nature Communications என்ற ஆய்வு பத்திரிகையில் வெளியாகி இருக்கும் கட்டுரையில் இந்த தகவல் இடம்பெற்று உள்ளது.
தற்போது வரை பூமியில் crust அதாவது வெளிப்பகுதி, mantle என்ற உட்பகுதி , outer core என்ற உட்கோளத்திற்கு மேலே இருக்கும் பகுதி, கடைசியாக inner core என்று அழைக்கப்படும் மையப்பகுதி உட்கோளம்.
பூமியில் இதுவரை இந்த 4 லேயர்கள்தான் இருந்தன. தற்போது 5வதாக ஒரு லேயர் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது உட்கோளத்தின் மையத்தில் இன்னொரு கோளம் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளனர். இந்த கோளம் மர்ம உலோகம் ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.
மிக தெளிவாக உள்ளே ஒரு உலோகம் இருப்பதை இவர்கள் கண்டுபிடித்து உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த உலோகத்தின் பண்புகள் தெரியவில்லை. அந்த மைய உலோகம் சுற்றுகிறதா என்றும் இதுவரை தெரியவில்லை அதை பற்றி தற்போதுதான் ஆய்வு செய்து வருகிறோம். வரும் ஆண்டுகளில் அதன் பண்புகள் தெரிய வரும் என்று இந்த ஆய்வை நடத்திய கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தான்-சன் பாம் தெரிவித்துள்ளார். TM
Post a Comment